ஒரு மணிநேரத்திற்கு 4000 ரூபாவை விட அதிக வருமானம் பெறும் யாசகர்கள்: வெளியாகியுள்ள தகவல்
யாசகரொருவரின் ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் பதிவாகும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாசகம் பெறுவது தொழிலாக மாறியுள்ளது.
செயற்படும் குழுக்கள்
இதில் பல வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளமையும் உண்மையாகவே தேவையுடையவர்கள் சுதந்திரமாக யாசகம் பெறும் சூழல் இலங்கையில் தற்போது இல்லை என்பதும் விசேட அம்சமாகும்.
ஒரு இடத்தில் தங்கி யாசகம் பெறும் நபர்களை அப்புறப்படுத்தினால், அந்த இடத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப புதிய யாசகர்களை நியமிக்க குழுக்கள் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
