யாழில் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவர் கைது: தீவிரப்படுத்தப்படும் விசாரணை
யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(18.01.2026)காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதன்போது, துன்னாலை காட்டுப்பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மற்ற சந்தேக நபர்களையும் கைது செய்ய நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பில், 50,000 ml கசிப்பு, 780,000 கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடைய பொருட்களை பருத்திதுறை நீதிமன்றில் பாரப்படுத்தி, மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.