ரணிலின் லண்டன் பயண வழக்கு விவகாரத்தில் புதிய திருப்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை, மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க, லண்டன் சென்ற போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையே இவ்வாறு விராஜ் தயாரத்னவின் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, லண்டனில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தபோது, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை
இந்நிலையில், சட்ட மா அதிபர், இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக வார இறுதி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கை, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரில் நெறிப்படுத்தி வருவதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக லண்டனுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை அதிகாரிகளால் பெறப்பட்ட ஆவணங்கள் இதுவரை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam