தலைமைத்துவ பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பித்துள்ள பொதுஜன பெரமுன கட்சி
எதிர்கால அரசியல் தலைவர்களை உருவாக்கும் அரசியல் தலைமைத்துவ பயிற்சி மையமொன்றை பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வு
கொழும்பில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (03) முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காக பிரதேச மட்டத்தில் திறமையான அரசியல்வாதிகளை உருவாக்குவது இந்தப் பயிற்சி மையத்தின் நோக்கமாகும்.
அரசியல் தலைமைத்துவ பயிற்சி
பொதுஜன பெரமுன கட்சி சாராத ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களும் இதில் இணைந்து அரசியல் தலைமைத்துவ பயிற்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஏராளமான அரசியல்வாதிகள், அரசியல்துறை விமர்சகர்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுஜன பெரமுன கட்சியுடன் நீண்டகாலமாக அதிருப்தி கொண்டு கட்சியை விட்டு விலகி சுயாதீனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.