நியமிக்கப்படும் 30 ராஜாங்க அமைச்சர்கள்:பொதுஜன பெரமுன விடுத்துள்ள கோரிக்கை
அடுத்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் முன்னர் அரசாங்கம் 30 ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்படும் ராஜாங்க அமைச்சர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வரும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோரிக்கைக்கு அமைய ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
அவர்களில் 40 பேரை ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்குமாறு பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்த போதிலும் ஜனாதிபதி 30 பேரையே ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்க உள்ளார்.
ராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam