போராட்டத்தின் பின்னணியில் அரச விரோத கலகம் முன்னெடுக்கப்பட்டது:பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு
போராட்டத்திற்கு பின்னால் அரச விரோத சதித்திட்ட கலகம் முன்னெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனை போராட்டமாக கருத முடியாது
நாட்டில் மீண்டும் இப்படியான சூழ்நிலை உருவாகாமல் இருக்கும் வகையில் நாட்டிற்குள் சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். நான் இதனை போராட்டமாக பார்க்கவில்லை. கலகமே காணப்பட்டது.
சொத்துக்களை கைப்பற்றுவது, அழிப்பது, அரச சொத்துக்களை கொள்ளையிடுவது போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களின் நோக்கம்.
நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு வீதத்தினரின் வீடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் நம்புவீர்களா?. 76 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை விலங்கு போல் வீதியில் அடித்து கொன்றனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த குமார வெல்கமவை வீதியில் வைத்து மோசமாக தாக்கினர். இந்த நாட்டில் கிளர்ச்சியே இருந்தது. இதனை போராட்டம் என்று கூற முடியாது.
தலைத்தூக்க விடக்கூடாது
போராட்டம் செய்தவர்கள் இருந்திருக்கலாம். போராட்டத்திற்கு பின்னால், அரச விரோத சூழ்ச்சியான கலகம் ஒன்று இருந்தது. இதனை தலைத்தூக்க விடக்கூடாது.
இந்த நாட்டில் ஜனநாயகத்தையும் மக்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்தில் எவரும் அச்சமின்றி அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் சட்டத்தையும் சட்டத்தின் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுப்படவில்லை. குழுக்களாக பிரிந்து செயற்படுவது வேறு பிளவுப்படுவது என்பது வேறு. பொதுஜன பெரமுனவின் பலம், கட்சியிடம் வலுவாக இருக்கின்றது.
ஒரு சிறிய தரப்பினர் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். அவர்களில் தவறாக வழிநடத்தப்பட்டவர்களும், சூழ்ச்சியாளர்களும் இருக்கின்றனர்.
சூழ்ச்சியாளர்களை நீக்கி விட்டு, ஏனையோரை இணைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை முன்நோக்கி கொண்டு செல்வோம் எனவும் சாகர காரியவசம்