பொதுஜன பெரமுன தலைமையில் ஆட்சி அமைந்தால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடையும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதிக்கம்கொள்ள கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஸ்தாபிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அரசியல் நெருக்கடிக்குக்கு சற்று தீர்வு காண முடியும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவில்லாமல்,எந்த அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.
மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்
தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்,பேச்சுக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை குறுகிய காலத்திற்குள் பலவீனப்படுத்தியது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஸ்தாபிக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதிக்கம் கொள்ள கூடாது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள்.
தேர்தல் ஒன்றை நடத்த முடியாத நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது ஒரு அரசியல் கட்சி மாத்திரம் ஆதிக்கம் கொள்ளும் போது சர்வக்கட்சி அரசாங்கத்தின் நோக்கம் முரண்பட்டதாக அமையும்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தீர்க்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட வேண்டும்,அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ! விருமன் பட சர்ச்சை Cineulagam

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம்- யாரை சந்தித்து எடுத்துள்ளார் பாருங்க Cineulagam

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan
