போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து சட்டத்தரணிகளும் போராட்டம் (Video)
அரசுக்கு எதிராக கொழும்பில் நடைபெறும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு மற்றும் திருகோணமலையில் சட்டத்தரணிகளினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பதற்றமான சூழ்நிலையும் அதிகரித்து வருகின்றது.
இந் நிலையில் பொதுமக்களுடன் இணைந்து இலங்கை சட்டத்தரணிகளும் இணைந்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் சட்டத்தரணிகள் சங்கம், சிவில் அமைப்பு, அரச தொழில் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று(9) காலை கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
நோக்கம்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆசன சிம்மாசனத்தை விட்டு வீட்டுக்கு செல்லுமாறு கூறியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கந்தளாய் நகர் ஊடாக கந்தளாய் அனோமா சந்தி வரை சென்றடைந்துள்ளது.
பதாகைகள்
"நாட்டை சீரழிக்காதே, ஆட்சியை வழங்கு,மக்களை துன்புறுத்தாதே மற்றும் உமது எண்ணம் நிறைவேராது" போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
