ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டிக்கும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு
ஜனாதிபதி, நீதி அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர், நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, வெளியிட்ட அறிக்கைகளுக்கு இலங்கையின் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு இன்று(22) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதித்துறைக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டையும் முறையான முறைப்பாடு வடிவில் உரிய மன்றத்தில் முன்வைக்க வேண்டும். இதனை விடுத்து நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் நாடாளுமன்றத்தில் அறிக்கை மூலம் அதனை மேற்கொள்ளக்கூடாது என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
சிவில் உரிமைகள்
2024, ஜூன் 18 அன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் பேசும்போது, பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அண்மைய வியாக்கியானத்தை விமர்சித்திருந்தார்.
இந்த விடயத்தில் நீதிமன்றம் 'நீதித்துறை நரமாமிசத்தில்' ஈடுபட்டுள்ளது என்று அவர் விமர்சித்ததாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைடுத்து, ஜூலை 19 அன்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, உயர்நீதிமன்றம் அரசியலமைப்பின் சில பகுதிகளை திறம்பட இடைநிறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை உலகப் போர் வெடிப்பதற்கு முன்னர் சிவில் உரிமைகளை இடைநிறுத்திய அடொல்ஃப் ஹிட்லரின் உத்தரவுடன் பார்ப்பதாக நீதியமைச்சர் கூறியிருந்தார்.
ஆபத்தமான கருத்துக்கள்
இந்தநிலையில் குறித்த அறிக்கைகள் குடிமக்கள் மனதில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதனை தவிர கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் சில நலன்கள் கொண்ட வழக்குகள் குறித்து கருத்து வெளியிட்டதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதித்துறையைப் பற்றி நயவஞ்சகமான ஆபத்தமான கருத்துக்களை வெளியிடுவது அவர்களின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் செயலாகும் என்று கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது
எனவே இந்தநிலையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் முன்னிற்கவேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |