உலகில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் AI வேட்பாளர்
பிரித்தானியாவில் ஸ்டீவ் எண்டகோர்ட் என்ற தொழிலதிபர் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. உலகில் AI வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.
பிரச்சாரம்
பிரித்தானியாவில் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கபப்டும் 59 வயதான ஸ்டீவ் எண்டாகாட் தன்னை பற்றி AI உருவாக்கிய படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த வேட்பாளர் AI ஸ்டீவ் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, AI ஸ்டீவ் தேர்தலில் வெற்றி பெற்றால், AI அல்ல ஸ்டீவ் எண்டாகோட் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்நாட்டு அரசாங்கம் பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு மேலும் AI வேட்பாளர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.