பிரித்தானியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
பிரித்தானியாவில்(United Kingdom) தொழில் கட்சி(Labour Party) சார்பில் இரண்டு ஈழத்தமிழ் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன் மேலும் இரு தமிழ் பூர்விகத்தைக் கொண்டவர்கள் போட்டியிடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பின்னணியில் ஈழத் தமிழ் பெண்களாகிய கிருஷ்ணி ருஷிகரனுக்கும், உமாக்குமரனுக்கும் ஆதரவாக (Tamils for Labour) தொழில் கட்சிக்கு ஆதரவான தமிழர்களின் அமைப்பு இரண்டு நிகழ்வுகளை நடத்தியுள்ளது.
முதலாவது, Feltham நட்சத்திரா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(14.06.2024) இடம் பெற்றதுடன் மற்றைய நிகழ்வு நேற்று(21) Ilford Platinum Lounge நடைபெற்றுள்ளது.
தமிழ்மக்களது இனப்படுகொலை
இந்த நிகழ்வுகளில் பெருந்திரளாக தமிழ் மக்கள் கலந்துகொண்டு தொழில் கட்சிக்கும் கிருஷ்ணி ருஷிகரனுக்கும், உமாக்குமரனுக்கும் தமது ஆதரவுகளையும் நிதி திரட்டல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
அதில் பங்கு பற்றிய முக்கியமான மூத்த தொழில் கட்சி அரசியல்வாதிகள் தமிழ்மக்களது இனப்படுகொலை தொடர்பாகவும், அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி உள்ளனர்.
முக்கியமாக இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்ட மூத்த அரசியல் வாதிகளாக்கிய Dame Siobhain MacDonagh MP , Sir Stephen Timms MP Lyn Brown, former West Ham MP , Wes Streeting MP(Shadow Health Secretary ) போன்றவர்கள் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசியது மட்டுமின்றி இது தமிழ்களின் வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் , இவர்களை வெற்றி பெற வைத்து சரித்திரம் படைப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
தொழில் கட்சி சார்பாக உரையாற்றிய Wes Streeting MP(பிரித்தானியாவில் தொழில்கட்சி அரசு அமைக்கும் போது சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவிருப்பவர்) இவர் ஈழத்தமிழ்கள் பிரச்சனை தொடர்பாக குறிப்பிடுகையில், எதிர்வரும் ஜுலை 5 ஆம் திகதி பொறுப்பேற்கவிருக்கும் தொழில்கட்சி அரசாங்கத்தின் அரச நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடமாக தமிழர்களுக்கு நீதி தேடும் விவகாரம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இது மாத்திரமின்றி, Lyn Brown, former West Ham MP , Sir Stephen Timms MP போன்ற மூத்த தொழில் கட்சி அரசியல்வாதிகள் இரண்டு வேட்பாளர்களையும் தனிபட்ட ரீதியாக பாராட்டி இருவரும் வெற்றிபெறுவதன் மூலம் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு பிரித்தானியாவில் முக்கிய இடத்துக்கு வரும் என்றும் குறிப்பிட்டள்ளனர்.
அத்துடன், தொழில் கட்சி தொடர்ந்தும் தமிழர்களுக்கு ஆதரவாக பயணிக்கும் என்றும் உறுதியளித்திருந்தார்கள்.
மேலும், இங்கு கலந்து கொண்ட Jas Athwal (Ilford South Candidate),James Asser(Westham & Becton Candidate),Eleanor Stringer(Wimbledon Candidate) ஆகிய வேட்பாளார்களும் இவ்விருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |