கோர விபத்தில் தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : அவசர சிகிச்சை பிரிவில் தந்தை, மகன் அனுமதி
அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் ஸ்தலத்திலேயே இன்று உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் நோக்கி சென்றுள்ளனர்.
இதன்போது, தம்புள்ளை பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேருக்கு நேர், அந்த முகச்சக்கர வண்டியை மோதியுள்ளது.
தாயும் மகளும் பலி
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த 54 வயதான தாய் தம்மிகா பத்மினி மற்றும் 17 வயதான மகள் சசினி தாரகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற மகனும், பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri