கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது
பெருந்தொகை தங்கத்தினை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியே கொண்டு செல்ல முயன்ற மதகுரு ஒருவரும், பெண்ணொருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்காவிற்கு புனித யாத்திரை சென்று இலங்கை திரும்பிய மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மதகுரு ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
சந்தேகநபர்களின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா பெறுமதியான 859 கிராம் நிறையுடைய 24 மற்றும் 22 கரட் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri