சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விடுதலை விவகாரம்!ஆதாரமாக இணைக்கப்பட்ட குழந்தையின் அறிக்கை

Srilanka Arrest Court
By Ajith Aug 27, 2021 02:19 PM GMT
Report

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை விடுவிக்க, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறுக் கோரி, கத்தோலிக்க குருமார் உட்பட 75 பேர் கையெழுத்திட்ட ஒரு பொது மனு ஒன்று, மனித உரிமைகள் பேரவை, அதன் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை, பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சர்வதேச சமூகத்தை,இந்த மனுவில் கையெழுத்திட்டவர்கள், கோரியுள்ளனர். 2021, ஆகஸ்ட் 26 அன்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தடுத்து வைக்கப்பட்டு 500 வது நாள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த பொது மனுவில் அனுப்பப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மற்றும் கத்தோலிக்க மதகுருமார் பொது மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். ஆயர் துலீப் டி சிக்கெரா, கொழும்பின் 14 வது எங்கிலிகன் ஆயர், தேசிய கிறிஸ்தவ சபையின் முன்னாள் பொது செயலாளர் கலாநிதி ஜெயசிறி டி பீரிஸ், வணக்கத்துக்குரியவர்களான M. சதிவேல், . எண்ட்ரூ தேவதாசன், மார்க் பில்லிமோரியா. நந்தன மனதுங்க. ஓஸ்வோல்ட் பி. ஃபிர்த். டெரன்ஸ் பெர்னாண்டோ மற்றும் மெக்ஸ்வெல் டாஸ் ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

இந்த பொது மனுவில் 23 பொது சமூக அமைப்புகள் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை பெண்கள் செயல் வலையமைப்பு, நீதி மற்றும் அமைதிக்கான பெண்கள், மாற்றுக் கொள்கைக்கான மையம் மற்றும் நவ சமசமாஜ கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குருநாதன், சட்டத்தரணி பவானி பொன்சேகா, கலாநிதி லியோனல் போபகே, இலங்கையின் ஜனநாயகத்திற்கான குரல்-குரல், முன்னாள் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ். ரத்னஜீவன் எச் ஹூல் ஆகியோரும், இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இந்த மனுவின் படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் குற்றப்பத்திரிகை இப்போது ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின் படி, ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படவில்லை, எனினும் இந்த சட்டங்களுக்கு முரணாக மாணவர்களுக்கு சில அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகைக்கு ஆதாரமாக ஒரு குழந்தையின் அறிக்கை மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஜூலை 14 ஆம் திகதி, சர்வதேச மன்னிப்பு சபையினால், ஹிஸ்புல்லாஹ் மனசாட்சியின் கைதியாக அங்கீகரிக்கப்பட்டார். மனசாட்சியின் கைதி என்பது வரையறையின்படி, ஒருவர், அவரின் இனத்தோடு தொடர்புடைய பாகுபாடு காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது பொருளாகும்.

எனவே, ஹிஸ்புல்லாவை மனசாட்சியின் கைதியாக அங்கீகரிப்பது அவர் நிரபராதி என்பதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும் என்று பொது மனுவில் கூறப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US