இலங்கையில் மரணித்த பிரபல தமிழ் பெண் சட்டத்தரணி குறித்து சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அறிக்கை
இலங்கையில் மரணித்த பிரபல தமிழ் பெண் சட்டத்தரணியான கௌரிசங்கரி தவராசா தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவர் காலமாகியுள்ள நிலையில் இதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தவராசா அவர்களுக்கு, தங்கள் மனைவி கௌரிசங்கரி தவராசாவின் மரணத்தால் நாம் துயரக்கடலில் ஆழ்ந்தோம்.
சோதனை மிகுந்த வேளைகளில் கூட எவ்வித பயமுமின்றி மிகுந்த துணிவுடன் போராடிய ஒரு ஒப்பற்ற திறமைசாலியான சட்டத்தரணியை நாம் இழந்து விட்டோம்.
அவரது பாராபட்சமற்ற சேவையின் விசேட அம்சமாக இருந்தது மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய இலவச சேவை.
சமுதாயத்தின் அடிக்கோட்டில் இருந்த மக்களுக்காகவும், அவர்களது மனித உரிமைகளுக்காகவும் மனித சமுதாயத்திற்காகவும் அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.
அவரது பிரிவு சட்டத்துறைக்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும். தயவு செய்து எங்கள் அனுதாபச் செய்தியை ஏற்றுக் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this video...



