யாரும் பார்க்க விரும்பாத பெரிய இரத்தக்களரி...ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “நேரம் மிகவும் முக்கியமானது,இதில் விரைவாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்து விடும்" என எச்சரித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ்
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது.
மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதற்கிடையே பலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது.
இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இது தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, "இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன்.
நேரம் மிகவும் முக்கியமானது. இதில் விரைவாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்து விடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
