அமெரிக்கா சென்ற பெஞ்சமின் நெதன்யாகு.! பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
உலகின் மிகவும் பாதுகாக்கப்படும் மனிதர்களில் ஒருவராக இருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அங்கு மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றிருந்த போது தான் அமைதி ஒப்பந்தமொன்று இறுதி செய்யப்பட்டது.
பாதுகாக்கப்படும் நபர்
இதற்கிடையே நெதன்யாகு நியூயோர்க் பயணத்தின்போது இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
நெதன்யாகு எந்தவொரு பாதுகாப்பு அல்லது புல்லட் ஃப்ருப் கண்ணாடி இல்லாமல் ஹோட்டல் ஜன்னல் அருகே அமர்ந்திருக்கும் அவரது போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இப்போது உலகின் மிகவும் பாதுகாக்கப்படும் நபர்களில் ஒருவராக இஸ்ரேல் பிரதமர் இருக்கிறார். பல தீவிரவாத அமைப்புகள் அவரை குறிவைத்து வருகிறது. இதனால் அவருக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், நியூயோர்க் நகரில் நெதன்யாகுவுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
நெதன்யாகு தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரே உள்ள கட்டிடத்திலிருந்து அவரை சிலர் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். குண்டு துளைக்காத கண்ணாடிகளோ அல்லது போதிய பாதுகாப்பு அம்சம் எதுவும் இல்லாமல் நெதன்யாகு அங்கு அமர்ந்திருக்கிறார்.
மிக எளிதாக ஸ்னைபர்களுக்கு இலக்காகும் வகையில் அவர் இருந்துள்ளார். இது அவரது பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கின்றதாக கூறப்படுகின்றது.
பிரதமரின் பாதுகாப்பு
ஓய்வுபெற்ற இஸ்ரேல் இராணுவ கர்னல் ரோனன் கோஹன், இந்த புகைப்படத்தை தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ளார்.
זו הייתה יכולה להיות עוד תמונה היסטורית המעידה על הדיונים שניהל רה״מ @netanyahu עם יועציו במלון בניו יורק, שעות גורליות רבות רבות טרם שטס לחתום על ההסכם בבית הלבן אמש.
— Ronen Cohen רונן כהן (@RonenCohen7150) September 30, 2025
אבל את התמונה הזו צילם אזרח המתגורר בבניין הסמוך ממש ממול למלון…
ללא חלונות משוריינים, ללא תריסים מוגפים, שלא… pic.twitter.com/AdjNp4RbeH
அவர் மேலும், "நியூயோர்க் ஹோட்டலில் பிரதமரின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
ஜனாதிபதியை பார்க்கச் செல்லும் முன்பு, நியூயோர்க்கில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரதமர் தனது ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஹோட்டலுக்கு எதிரே உள்ள கட்டடத்தில் வசிக்கும் ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.. குண்டு துளைக்காத ஜன்னல்கள் இல்லை.. பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இந்த இடத்தில் தான் நெதன்யாகு அமர்ந்துள்ளார்.
பகலாக இருந்தாலும், இரவாக இருந்தாலும் மிக எளிதாக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆயுதத் தாக்குதல்களுக்கு ஆளாகும் வகையில் பாதுகாப்பு இல்லாமல் நெதன்யாகு இருந்துள்ளார்.
ட்ரம்ப் ஆதரவாளரான சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டு 3 வாரங்கள் மட்டுமே ஆகிறது. ட்ரம்பை கொல்லவும் கூட கடந்தாண்டு அங்கு முயற்சி நடந்தது. அப்படியிருக்கும்போது நெதன்யாகு இதுபோல இருந்தது கவலை தருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் காசா மோதல் பல ஆண்டுகளாக தொடரும் நிலையில், அது இப்போது முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சில நாட்கள் அல்லது வாரங்களில் காசா போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
