2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு..
இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு
நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.
ஒக்டோபர் மாதம் என்றாலே நோபல் பரிசு காலம் என்று பொருளாகும், ஆறு நாட்கள், ஆறு பரிசுகள் அறிவிக்கப்படும்.
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி முதல் நாளான இன்றையதினம்(6) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
