உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியின் தகாத செயல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரின் தகாத நடத்தையின் காரணமாக அவர் கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரை அவருக்கு சட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமத்தப்பட்டுள்ள குற்றம்
குறித்த சட்டத்தரணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பாக சமர்ப்பணங்களை முன்வைத்ததாகவும் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவரை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவரை மனநல மருத்துவரிடம் காண்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri