சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை ஒத்திவைப்பு
இலங்கை சட்டக்கல்லூரி அனுமதிக்கான நுழைவு பரீட்சை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை மற்றும் சிரேஷ்ட புள்ளி விபரவியலாளர்களுக்கான தர மதிப்பீட்டு பரீட்சை என்பன இவ்வாறு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இன்றைய தினம் பரிட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நடத்தப்பட இருந்தது.
மோசமான காலநிலை
எனினும் நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக சட்டக் கல்லூரி பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri