மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 06 பேரின் சடலங்கள் மீட்பு
மட்டக்களப்பு - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி - சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், இன்றையதினம் (28) மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்களாக மீட்பு
கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.

இந்தநிலையில் , வெள்ளத்தில் மூழ்கி 6 பேர் காணாமல் போயிருந்த நிலையில் நால்வரின் சடலங்கள் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்டுள்ள சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan