தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த வேலைகள் தீவிரம்
ஜனாதிபதி தென்னை முக்கோண வலயம், வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயம்
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க நாளை (02.09.2025) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முல்லைத்தீவு விஜயம் செய்யவுள்ளார்.
முல்லைத்தீவு விஜயம் செய்யும் ஜனாதிபதி தென்னை முக்கோண வலயம், வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தென்னை முக்கோண வலயம்
இந்த நிலையில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த வேலைகள் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டப வளாகத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
மேலும் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.













அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
