தெற்காசிய போட்டியில் தமிழருக்கு கிடைத்த வெற்றி
தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஸன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஐயாயிரம் மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் வக்ஸன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் ரான்ச்சியில் நான்காவது தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடர் இன்றைய தினம் ஆரம்பமானது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு போட்டிகள்
இன்றைய தினம் நடைபெற்ற 5000 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் 14:22:17 நிமிடங்களில் ஓட்டத் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இலங்கையைச் சேர்ந்த வக்ஸன் 14:23:21 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த முகேஸ் பஹதுர் பால் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னராஜா வக்ஸன் இதற்கு முன்னர் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan