ரணில் - சஜித் கட்சிகள் சங்கமம் இவ்வருட இறுதிக்குள்..! தலதா நம்பிக்கை
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இவ்வருடத்துக்குள் வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களில் 50 சதவீதமானோர் தற்போது தமது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இவ்வருடத்துக்குள் வெற்றி
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சங்கமம் இவ்வருடத்துக்குள் வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
2022 இல் நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்த நபர்களுக்கு எதிராக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam