லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு உத்தரவு
நாட்டிலுள்ள நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க தவறிய குற்றஞ்சாட்டி, லாப்ஸ் எரிவாயு (LAUGFS Gas PLC) நிறுவனத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நேற்று (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு உத்தரவு
கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, நிறுவனத்திற்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 86ஆம் பிரிவை மீறி, நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்கத் தவறியதாகக் கூறியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை நுகர்வோர் விவகார அதிகாரசபை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.