இளவரசி கேட் தொடர்பில் அரண்மனை வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் (kate middleton) தொடர்பில் அரண்மனை அண்மையில் மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் இளவரசி நாளை நடைபெறவிருக்கும் ஆண்களுக்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டியின் இறுதிப்போட்டியைக் காண வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிப்பு
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், மன்னருடைய பிறந்தநாள் விழாவில் அவர் கலந்துகொண்ட விடயம், அவரது ரசிகர்களுக்கும், பிரித்தானிய மக்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர் அடுத்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு வெற்றி பரிசையும், இளவரசி கேட், தன் கையால் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
