இந்திய இசைக்குயிலின் உடல்நிலை கவலைக்கிடம்! மருத்துவமனை அறிவிப்பு! (காணொளி)
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு செயற்கை சுவாச இயந்திர உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் லதா மங்கேஷ்கருக்கு உயிர்காக்கும் சிகிச்சை (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவர் இன்னும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரத்தில், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து செயற்கை சுவாசக்கருவிகள் பரீட்சார்த்தமாக அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.
1969இல் லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. 199இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
2001இல் பாரத் ரத்னா விருது அவருக்கு கிடைத்தது. 1999ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை அவர் ராஜ்சபா உறுப்பினராக பதவி வகித்தார்.
லதா மங்கேஷ்கரின் பிறந்த நாள் நிகழ்வின் ட்விட்டர் பதிவு இது!
The nightingale turns 91. Wish you good health on your birthday, Lata ji ???#LataMangeshkarbirthday pic.twitter.com/vpMX5rWVve
— Sushmita Dey (@sushde) September 28, 2020
லதா மங்கேஷ்கர் -அமிதாப் பச்சன் ஆகியோர் ஒரே மேடையில்
Two LEGENDS- Lata Mangeshkar & Amitabh Bachchan share the stage to sing the ICONIC Song "Yeh Kahaan Aa Gaye Hum Yunhi Saath Chalte Chalte"?? pic.twitter.com/OgbUusSBXh
— Rosy (@rose_k01) December 18, 2018



