தமிழகத்திற்கு வரும் இலங்கையர்கள் தொடர்பான விடயம் சட்ட ரீதியாக கையாளப்படும் - மு.க.ஸ்டாலின்
தமிழகத்திற்கு வரும் இலங்கையர்கள் தொடர்பான விடயம் சட்ட ரீதியாக கையாளப்படும் - மு.க.ஸ்டாலின் இலங்கையில் இருந்து மக்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வருவது தொடர்பான சிக்கலை சட்டரீதியாக எப்படி கையாள்வது என்பது சம்பந்தமாக இந்திய ஒன்றிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை காரணமாக அங்கிருந்து வரும் தமிழகத்திற்கு வரும் தமிழர்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு இந்திய ஒன்றிய அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டு செயற்பாடு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ நான் அண்மைய காலமாக கஷ்டப்படும் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வருவது தொடர்பாக செய்திகளை பார்த்து வருகிறேன். இதனை எப்படி சட்ட ரீதியாக கையாள்வது என்பது சம்பந்தமாக ஒன்றிய அரசுடன் சம்பந்தப்பட்டு செயற்படுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இலங்கை தமிழர்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்த தமிழக அரசாங்கம் பாடுபடும்” எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இது சம்பந்தமாக தமிழக சட்டப் பேரவையின் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதாரணி, சட்டப் பேரவையில் கருத்து வெளியிட்டதுடன் தமிழக அரசாங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்டுளள இலங்கை தமிழர்களுக்கு உதவ முடியுமான என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கண்டாறு கூறியுள்ளார். பெண்கள், சிறுவர்கள் உட்பட 10 பேர் கொண்ட இலங்கை தமிழர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் கஷ்டங்கள் காரணமாக கடந்த புதன் கிழமை தமிழகத்தின் ராமேஸ்வரத்தை சென்றடைந்தனர். இதற்கு முன்னர் ஆறு இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்குள் வந்தனர்.
இலங்கை அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் எரிபொருள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த வாரம் இந்திய அரசு இந்த நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கியதுடன் ஒரு பில்லியன் டொலர்களை கடனுதவியாக வழங்குவதாக அறிவித்தது.