ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில், இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் பினைக் பிராக்(Bnei Brak) பகுதியில் ஒரு கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடந்தபோது அந்த இளைஞர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஏவுகணை வீழ்ந்ததில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் சிதறல்கள் காரணமாக அவர் காயமடைந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகள்
காயமடைந்த இளைஞன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காயமடைந்த இளைஞனுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
