குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் முக்கிய புள்ளி மரணம்..! அதிகரிக்கும் பதற்றம்
மொஸ்கோவில் நடந்த கார் குண்டு வெடிப்பில் ரஷ்யாவின் முக்கிய இராணுவ ஜெனரல் யாரோஸ்லாவ் மொஸ்காலிக்(Yaroslav Moskalik) கொல்லப்பட்டார்.
மொஸ்காலிக், தனது காரை தரித்து விட்டு செல்ல முற்பட்ட போது குண்டு வெடித்துள்ளது.
இதனையடுத்து, அவர் பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம்
அத்துடன், குண்டு வெடித்ததன் காரணமாக அருகிலிருந்த கட்டிடங்களும் தீக்கிரையாகியுள்ளன.
💥Nga: Thiếu tướng Yaroslav Moskalik, Phó Tổng cục trưởng Tổng cục Tác chiến Bộ Tổng tham mưu Bộ Quốc phòng Nga bị ám sát bằng bom xe sáng nay tại vùng ngoại ô Balashikha, Moscow.
— Phổ Đà Tiên Sinh 🌿🪸☘️ (@DjenX_Pi) April 25, 2025
pic.twitter.com/S1v61MTfvZ
இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, 59 வயதான மொஸ்காலிக், ரஷ்ய இராணுவத்தின் பிரதான புலனாய்வு இயக்குநரகத்தில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |