மற்றுமொரு நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 54 இராணுவ வீரர்கள் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 17 ஆம் திகதி வடக்கு பெனினில் உள்ள தேசிய பூங்காவில், குறித்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
பயங்கரவாதத் தாக்குதல்
புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
70 இராணுவ வீரர்களை கொன்றதாக அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.
இராணுவத்தின் மீது
மாலியை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, சமீபத்தில் தனது செயல்பாடுகளை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
வடக்கு பெனினில் கிளர்ச்சியாளர்கள் செயல்படத் தொடங்கியதிலிருந்து இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
