சற்றுமுன்னர் லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது
லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு பெருந்தொகை நட்டம்
ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு முறையான கொள்முதல் செயன்முறையின்றி பொதியிடல் உறைகளை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்முதல் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பத்து மூன்று இலட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக விநியோகஸ்தர் நிறுவனம் அநியாயமான முறையில் இலாபம் ஈட்டுவதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri