நாட்டின் பிரச்சினையை இரண்டு ஆண்டுக்குள் தீர்க்கலாம்:ரணில் கூறும் யோசனை
பொருளாதார ரீதியாக பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நடைமுறையில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக முறைமையை முற்றாக மாற்றியமைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுடன் நட்பை ஏற்படுத்தி, சரியான தூரநோக்குடன் செயற்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்குள் தற்போதைய பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இளம் தொழில் சார் நிபுணர்கள் சிலருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே முன்னாள் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது 25 மில்லியன் டொலர்களுக்கும் குறைவான அந்நிய செலாவணி மாத்திரமே கையிருப்பில் எஞ்சி இருக்கின்றது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட வரி குறைப்பு காரணமாக நாட்டுக்கு சுமார் 800 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri
