டொலரின் பெறுமதி 400 ரூபாவாகும்! ரணில் தெரிவிப்பு
டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி தொடச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரமளவில் டொலரின்பெறுமதி 400 ரூபாவை அண்மிக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
மறுபுறம் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த நிலையில் உள்ளன.இலங்கையில் தனிநபர் வருமானம் டொலரை விட குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளது.
நட்டமடையும் அரச நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அரசுக்கு சுமையாக இல்லாமல் இலாபமடைய வேண்டுமாயின் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட வேண்டும்.
தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் அது சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நடுத்தர மக்கள் பொருளதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.நடைமுறையில் உள்ள வரவு செலவு திட்டத்தை புறக்கணித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri