நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கேகாலை, காலி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சீரற்ற காலநிலை
குறித்த மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மன்னார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
