நிலவும் சீரற்ற வானிலை! பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இன்று (14) மாலை 4.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்கை, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புளத்சிங்கள மற்றும் அங்கலவத்தை, கண்டி மாவட்டத்தில் கங்க இஹலகோரலே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, நிவித்திகல, எஹலியகொடை, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri