காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (15) பிற்பகல் 02.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.
குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடல்சார் மற்றும் கடற்றொழில் சமூகங்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
