நுவரெலியாவில் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரெஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இ
ந்த மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று (30) அந்த பகுதியை சேர்ந்த பலர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம்
தொடர்ந்து மழை பெய்து வருவதால், குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் அங்குள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட, குழுவினருக்கு தேவையான உணவை, பேரிடர் நிவாரண சேவைகள் மையம் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேரிடர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் மோசமான காலநிலை நிலவுவதால் , ஹங்குரான்கெத்த மற்றும் வலப்பனை பகுதிகளில் பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam