ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்த விபத்துக்குள்ளானமையினால் சில மணிநேரம் போக்குவரத்து ஒருவழி பாதையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று(08.06.2026) ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.
மண்சரிவு
சரிந்து வீழ்ந்த மண்மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்ததையடுத்து, குறித்த வீதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்தில் பிற்பகல் நேரங்களில் விடாது பெய்யும் அடைமழை காரணமாக ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும், நோர்வூட் நிர்வாகப் பொறியாளர் அலுவலக அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.


இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு பெருந்தொகை வரி! நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 13 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri