சுவிற்சர்லாந்தில் நிலச்சரிவில் சிக்கி மூவர் மாயம் : மீட்பு பணிகள் தீவிரம்
சுவிற்சர்லாந்தின்(Switzerland) தென்கிழக்குப் பகுதியில் பெரும் மின்னல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிசோக்ஸ் பள்ளத்தாக்கில் இன்று(22) ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில் சிக்கிய பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி கருவிகள்
இந்நிலையில் காணாமல் போனோரை மீட்கும் நடவடிக்கையினை மீட்புக்குழுவினர் அகழ்வாராய்ச்சி கருவிகளையும், சிறப்பாகப் பயிற்சி பெற்ற தேடுதல் நாய்களையும் கொண்டு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் சுவிஸ் பொலிஸ் அதிகாரி வில்லியம் குளோட்டர், காணாமல் போன மூன்று பேரையும் உயிருடன் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கை இருப்பதாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், லோஸ்டல்லோ(Lostallo) நகராட்சியில் உள்ள வீடுகளை பாறை சரிவு தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri