மூன்று நீதிமன்றங்களின் பிடியில் சிக்கிய பிள்ளையான் - சுற்றிவளைக்கப்பட்ட சகாக்கள்
பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கில் தற்போது அவருக்கான தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல முக்கிய ஆதாரங்களும் அவரின் சகாக்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் காணொளி மூலமாக நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னிலைபடுத்தப்பட்ட போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri