மண்சரிவு அபாய வலய மீள்குடியேற்ற நிதியுதவி அதிகரிப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு
மண்சரிவு அபாய வலயங்களில் இருந்து மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவரை காலமும் ஒரு பயனாளி குடும்பத்திற்கு புதிய வீட்டை அமைப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி, தற்போது 2.5 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்திற்கான நிதியுதவி அதிகரிப்பு
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாகத் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பங்களுக்கு மேலதிக ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர் இதில் வலியுறுத்தியிருந்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகளே தங்களது வீடுகளைத் தாங்களாகவே நிர்மாணித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நிதி உதவியை அரசாங்கம் தவணை அடிப்படையில் வழங்கும்.
இந்த அதிகரித்த நிதியுதவியானது, வீடுகளைக் கட்டும் பணியை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்வதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam