மத்திய கிழக்கு போர் எதிரொலி! உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஐ.நா எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போரினால், ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அது வாழ்க்கைச் செலவுக்கான அழுத்தங்களை அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் தெஹ்ரானின் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து இராணுவ அதிகரிப்பு, உலகின் மிக முக்கியமான கடல்சார் நெருக்கடிகளில் ஒன்றான ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்தை ஏற்கனவே சீர்குலைத்துள்ளது என்று ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் (UNCTAD) அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர்
அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக எரிசக்தி, உரம், போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரிப்பதனால் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும். இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கின்றன. இது அழுத்தத்தை கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலான மசகு எண்ணெயில் 38 சதவீதமும் எல்பிஜி எரிவாயுவில் 29 சதவீதமும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நீரிணையினூடாக அனுப்பப்படும் தயாரிப்புக்களில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. எனவே, இதன் தாக்கம் ஆசிய நாடுகளில் அதிகம் உணரப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam