விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ள நிலங்கள்: பாதிக்கப்பட்டோர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)

Ampara President of Sri lanka Sri Lanka Food Crisis
By Rusath Jun 06, 2022 02:23 PM GMT
Report

நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வேளை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 15ஆயிரம் ஏக்கர் பொன் விளையும் பூமி விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு இந்தக் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் உணவு உற்பத்திக்காகக் கையளிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக காணிகளை இழந்த பாதிக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு அட்டாளைச்சேனை மனித எழுச்சி அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ள நிலங்கள்: பாதிக்கப்பட்டோர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos) | Lands Barred Cultivating Demand Put Victims

விவசாய நிலங்கள் அபகரிப்பு 

அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைப்பின் அம்பாறை மாவட்ட நில உரிமைக்கான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,

நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும் என்று துறைசார்ந்த நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உணவு உற்பத்தியில் சிறப்பான பங்கை வகித்த பொன் விளையும் பூமிகளான எமது காணிகள் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, ஜனாதிபதியின் உத்தரவைக் கருத்திற் கெண்டு எமது காணிகளை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்து மீண்டும் இந்த நாட்டுக்கு பெரும் உணவு உற்பத்தியை மேற்கொண்டு பொருளாதார உணவு நெருக்கடிக்குப் பங்களிப்புச் செய்யும் சந்தர்ப்பத்தை அதிகாரிகள் எமக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ள நிலங்கள்: பாதிக்கப்பட்டோர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos) | Lands Barred Cultivating Demand Put Victims

காணிகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் 

திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

இது விடயமாகக் கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் இந்தக் காணிகளை மீட்டெடுப்பதற்கான முன் முயற்சிகள் தொடரும் என அங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கே. நிஹால் அஹமட் உட்படப் பிரதேச பாணி இழந்தோர் அமைப்புக்களின் பிரதிநிதிகளான விவசாயிகளும் துறை சார்ந்த செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ள நிலங்கள்: பாதிக்கப்பட்டோர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos) | Lands Barred Cultivating Demand Put Victims

விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ள நிலங்கள்: பாதிக்கப்பட்டோர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos) | Lands Barred Cultivating Demand Put Victims

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US