கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் இலங்கை! அமெரிக்கா வழங்கிய முக்கிய உறுதி
இலங்கையின் தேசிய கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ள அமெரிக்கக் குழு, இலங்கை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறுவதற்குத் தேவையான நிதி மற்றும் உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
கண்ணிவெடிகள்
இலங்கைக்கான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஆரம்பம்; முதலே ஆதரவளித்து வரும் அமெரிக்க அரசு, 2026 ஆம் ஆண்டிற்காக 8.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்தநிலையில், சந்திப்பின்போது கருத்துரைத்த, வீட்டுவசதி, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க இந்த திட்டத்தை விரைவுபடுத்த அமெரிக்காவின் தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.

நாட்டில் இன்னும் 20.51 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மட்டுமே கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு எஞ்சியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எஞ்சியுள்ள பகுதிகளை விரைவில் துப்புரவு செய்து, கண்ணிவெடிகள் இல்லாத இலங்கையை உருவாக்குவதே அரசின் நோக்கம் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள், மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri