பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் கடற்படையால் அபகரிக்கப்பட்ட காணிகள்! உடனடியாக விடுவிக்ககோரி போராட்டம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றக்காணி, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப்படைகள் அங்கிருந்து வெளியேறக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் கையளிப்பு
பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், வலிக்காமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப்பேராணியில் வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்கு, தபாலக காணியிலிருந்து வெளியேறு, போன்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை துறைமுகத்திற்கு எதிராகவுள்ள காணி, மற்றும் வெளிச்சம் வீடு என்பன இராணுவம் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தற்போது தபாலகம், நீதிமன்றம் என்பனவற்றிகான கட்டடங்கள் புதிதாக அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காணி இன்மை காரணமாக திரும்பும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
