தமிழர் பகுதியில் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு: ரவிகரன் எம்.பி பகிரங்கம்

Tamils Mullaitivu Government Of Sri Lanka Crime
By Shan Feb 03, 2025 01:31 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அரச இயந்திரங்கள் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்தால் மக்கள் வீதிகளிலா குடியிருப்பது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (03.02.2025) இடம்பெற்றது.

பொதுமக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்!

பொதுமக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்!

அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் 

இந்தக் கூட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 255 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை என முறையிடப்பட்டது.

இந்தநிலையில், கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு: ரவிகரன் எம்.பி பகிரங்கம் | Land Grabbing By State Machinery In Mullaitivu

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் ஐயங்கன்குளத்தில் 21குடும்பங்களுக்கும், பழையமுறிகண்டியில் 04குடும்பங்ளுக்கும், புத்துவெட்டுவான் பகுதியில் 12குடும்பங்களுக்கும், கல்விளான் பகுதியில் 15குடும்பங்களுக்கும், தென்னியன்குளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், கோட்டைகட்டியகுளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், அம்பலப்பெருமாள் குளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், அமதிபுரம் பகுதியில் 07குடும்பங்களுக்கும், துணுக்காய் பகுதியில் 08குடும்பங்களுக்குமாக மொத்தம் 255குடும்பங்கள் துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவிலே காணியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படையினராலும், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச இயந்திரங்களால் மக்களினுடைய காணிகள் அதிகளவில் அபகரிக்கப்பட்டிருப்பதற்கான புள்ளிவிபரங்கள் எம்மிடமுள்ளன.

இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள இந்த காணிகள் மீட்கப்பட்டு இவ்வாறு வலிந்து காணிகள் இல்லாமல் செய்யப்பட்ட மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு

அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு

எல்லைக்கற்கள் இட்டு ஆக்கிரமிப்பு

குறிப்பாக வன இலாகா மக்களிடமோ, கிராமஅலுவலர், பிரதேசசெயலாளர், மாவட்டசெயலர் எவருடனும் தொடர்புகொள்ளாமல், அறிவித்தல் வழங்கப்படாமலேயே இவ்வாறு மகாகளின் காணிகளில் எல்லைக்கற்கள் இடுகின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

தமிழர் பகுதியில் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு: ரவிகரன் எம்.பி பகிரங்கம் | Land Grabbing By State Machinery In Mullaitivu

இனி இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். எமது வன்னிப் பகுதிகளில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், நீண்ட காத்திற்குப் பின்னரே தமது இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர்.

இந்தநிலையில், அந்த மக்கள் இடப்பெயர்விற்கு முன்னர் வாழ்ந்த குடியிருப்புக் காணிகள், நெற்செய்கைக்காணிகள், மேட்டுப் பயிர்ச்செய்கைக் காணிகள் உள்ளிட்ட அனைத்துக்காணிகளும் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின்றன.

இவ்வாறு பற்றைக்காடுகளாகக் காணப்படும் மக்களின் காணிகளையே வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரசதிணைக்களங்கள் எந்த அறிவிப்புக்களையும் செய்யாது தமது எல்லைக்கற்களை இட்டு ஆக்கிரமிப்புச்செய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு. வருகின்றனர்.

இவ்வாறு மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

முறையான நடவடிக்கை

இவ்வாறான அபகரிப்புச் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றன. எனவே இந்த இந்தவிடயத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழர் பகுதியில் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு: ரவிகரன் எம்.பி பகிரங்கம் | Land Grabbing By State Machinery In Mullaitivu

ஏனெனில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22006ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35000ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.

அந்தவகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். அவ்வாறு எமது மக்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பாதுகாத்ததால்தான் எமது மக்கள் நிறைவாகவும், சிறப்பாகவும் வாழ்ந்தார்கள்.

நிலம் தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச் செய்தால் எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது எனவும் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீரநகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு

வீரநகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US