ஹட்டன் கொட்டகலையில் இராணுவ முகாமுக்காக காணியா? இராதாகிருஸ்ணன் விடுத்துள்ள கோாிக்கை
பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளை அகற்றி, வீடுகளை நிா்மாணிப்பதற்கான பாதீட்டு மூலம் வருடம் ஒன்றுக்கு 100 வீடுகளை மாத்திரமே நிர்மாணிக்கமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஸ்ணன் தொிவித்துள்ளார்.
2022 பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போது அவா் இதனைக் குறிப்பிட்டாா்.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பொருளாதாரப்பிரச்சனைக்கு பாதீட்டில் தீா்வுகள் இல்லை. எனவே மலையக மக்களுக்கான உாிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவா் கோாிக்கை விடுத்தாா்.
மலையக காணிகளை வெளியாருக்கு வழங்கவேண்டாம். அவற்றை காணியற்ற இளைஞா்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். நுவரெலிய மாவட்டத்தின் லிந்துலை பகுதியில் கிறிஸ்தவ மதச் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளது.
இது மதங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாக கருதப்படுகிறது. எனவே இது தொடர்பில் உாிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
இதேவேளை ஹட்டன் கொட்டக்கலையில் 10 ஏக்கர் காணி இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதில் உண்மையெனில் அதனை அரசாங்கம் திரும்பப்பெறவேண்டும். அங்குள்ள தமிழ் மக்கள் இதனை எதிர்க்கின்றனா்.
வடக்குகிழக்கில் படையினர் மேற்கொள்கின்ற அடக்குமுறையைப்போன்று தனிநாடு எதனையும் கோராத தாமும் அடக்குமுறைக்கு உளளாகலாம் என்ற அச்சத்தை அந்த மக்கள் வெளிப்படுத்துவதாக இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டாா்.
இதற்கிடையில் அரச சொத்தாக உள்ள அரசப் பெருந்தோட்ட யாக்கத்தின் தொழிலாளா்களுக்கு இன்னும் கடந்த மாதத்துக்கான வேதனம் வழங்கப்படவில்லை. அது தொடா்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தாா்.