முல்லைத்தீவு உடையார்கட்டில் காணி சர்ச்சை: வணிகர்கள் உண்ணாவிரத போராட்டம்

Mullaitivu Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Keethan Mar 31, 2026 06:43 AM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு பகுதியில் உள்ள நான்கு வணிக நிலையங்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால், குறித்த வணிக நிலையங்களை ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(30.03.2026) கடைகளின் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சைமறுக்கப்பட்ட விவகாரம்! விசாரணையில் வெளிவந்த தகவல்

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சைமறுக்கப்பட்ட விவகாரம்! விசாரணையில் வெளிவந்த தகவல்

கடைகளை அகற்ற உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள், குறித்த காணியில் நீண்டகாலமாக வாழ்வாதாரத்திற்காக கடைகள் நடத்தி வருவதாகவும், தற்போது அவற்றை அகற்றுமாறு அறிவித்திருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அரச காணியாகக் காணப்பட்ட அந்த பகுதியில் வணிகம் செய்ய அனுமதி வழங்கியிருந்ததாகவும், பிரதேச சபையிடமிருந்து அனுமதி பெற்றதுடன் பிரதேச செயலகத்திற்கு வரியும் செலுத்தி வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு உடையார்கட்டில் காணி சர்ச்சை: வணிகர்கள் உண்ணாவிரத போராட்டம் | Land Dispute In Udayarkat Mullaitivu

இத்தகைய சூழ்நிலையில் திடீரென காணியை விட்டு வெளியேறுமாறு அறிவித்திருப்பது கவலையளிப்பதாகவும், முன்னர் குறித்த காணியை குத்தகைக்கு வழங்க பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்ததாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போதைய பிரதேச செயலாளர், முன்பு செய்யப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்து, குறித்த காணியை அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற நடமாடும் காணி கச்சேரியில் இந்த காணி ஆலயத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அதன்படி ஆலயத்துடன் ஒப்பந்தம் செய்து வாடகை செலுத்தி கடைகளை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த முடிவை ஏற்க முடியாது என தெரிவித்த வணிகர்கள், தங்களது நிலையை பல அரசியல் தலைவர்களிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உடையார்கட்டு முருகன் ஆலய நிர்வாகத்தினரும் ஊடகங்களை சந்தித்து காணி விவகாரம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர்.

ஆலய நிர்வாகம் உரிமையாளர்களுக்கு விடுத்த வேண்டுகோள்

அவர்கள் தெரிவிக்கையில்,

போர் முடிந்த பின்னர் குறித்த கடை உரிமையாளர்கள் ஆலய நிர்வாகத்திடம் கடிதம் எழுதி கடைகள் நடத்த அனுமதி கோரியதாகவும், பின்னர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களது பெயரில் அனுமதி பெற்று கடைகள் கட்டியதாகவும் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் வரை சென்ற காணிப்பிணக்காக இருந்து வந்ததாகவும், 2025 அக்டோபர் 21ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் குறித்த காணி ஆலயத்திற்கு சொந்தமானது என தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு உடையார்கட்டில் காணி சர்ச்சை: வணிகர்கள் உண்ணாவிரத போராட்டம் | Land Dispute In Udayarkat Mullaitivu

இதுகுறித்து கலந்துரையாட கடை உரிமையாளர்களுக்கு ஆலய நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்தாலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடைகள் நடத்துவதற்கு தங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும், ஆனால் ஆலயத்திற்கு வாடகை செலுத்தி கடைகளை தொடர்ந்து நடத்தலாம் என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு: சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு: சற்றுமுன் வெளியான அறிவிப்பு


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US