நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்து: நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை

Parliament of Sri Lanka National Peoples Party Dr Wijeyadasa Rajapakshe Shehan Semasinghe
By Dharu May 08, 2024 12:42 AM GMT
Report

தமது ஆட்சியில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் செயற்படுத்தும் அதிகாரத்தை தமது உறுப்பினர்களுக்கு வழங்குவோம் என ஜே .வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான லால்காந்த குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அரச மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜே .வி.பி.யை வசைபாடினர். ஜே வி.பி.யின் கடந்த காலப் படுகொலைகள், அட்டூழியங்கள், அரச விரோத செயல்கள் தொடர்பில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களால் பட்டியலிட்டப்பட்டுள்ளது.

அவை தொடர்பில் விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், சபையில் தனி ஒருவராக இருந்த ஜே .வி.பி. (தேசிய மக்கள் சக்தி) எம்.பி. ஹரிணி அமரசூரியவிடம்(Harini Amarasuriya) கேள்விக்களும் தொடுக்கப்பட்டது.

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணி

இதன்படி, நாடாளுமன்றத்தில் நேற்று (07.05.2024) நடைபெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe),

"மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்து: நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை | Lalkanta S Comment Of Contempt Of Court

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தமது ஆட்சியில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் செயற்படுத்தும் அதிகாரத்தைத் தமது உறுப்பினர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1971, 1988, 1989, 2022 ஆகிய காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்ட விதம் நினைவுக்கு வருகின்றது. காட்டுமிராண்டித்தனமாக அரச அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தைத் தமது உறுப்பினர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிடுவதனை தேசிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரிணி அமரசூரிய ஏற்றுக்கொள்வாரா என்பதனை அவரிடம் வினவுகின்றேன்" என்றார்.

இதன்போது பதிலளித்த ஹரிணி அமரசூரிய, "நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் செயற்படுத்தலை மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் வழங்குவதாக நாம் ஒருபோதும் குறிப்பிடவில்லை." என்றார்.

ரணிலுக்கு மொட்டுவின் ஆதரவு குறித்து மகிந்த விளக்கம்

ரணிலுக்கு மொட்டுவின் ஆதரவு குறித்து மகிந்த விளக்கம்

தீக்கிரையாக்கப்பட்ட நீதிமன்றக் கட்டடங்கள்

இதன்போது, கருத்து தெரிவித்த கே.டி. லால்காந்த, உள்ளிட்ட அரச, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, "ஹரிணி அமரசூரிய போன்ற படித்த உறுப்பினர் ஒருவர் மக்கள் விடுதலை முன்னணி போன்ற காட்டுமிராண்டித்தனமான கட்சியின் மேடையில் ஏறி தனது கொள்கையை மாற்றிக்கொண்டது கவலைக்குரியது. தவறான பக்கம் சென்று விட்டார்" என்றார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்து: நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை | Lalkanta S Comment Of Contempt Of Court

இதன்போது எழுந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச "1988, 1989 காலப்பகுதிகளில் 27 நீதிமன்றக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நுகேகொடை, கல்கிஸை, ஹோமாகம ஆகிய நீதிமன்றங்களின் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஹோமாகம நீதிமன்றத்தின் நீதிபதியின் கறுப்பு மேலங்கி பலவந்தமாகக் கழற்றப்பட்டு மாட்டின் மீது அந்த அங்கி அணிவிக்கப்பட்டு மாடு வீதியில் விரட்டப்பட்டது. மக்கள் மத்தியில் இன்றும் அந்த அச்சம் காணப்படுகின்றது." என்றார்.

இதன்போது, "நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அதிகாரத்தைச் சாதாரண மக்களுக்கு வழங்குவதனை ஹரிணி அமரசூரிய எம்.பி. ஏற்றுக்கொள்வாரா?" என அரச மற்றும் எதிரணி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது மீண்டும் எழுந்த ஹரிணி அமரசூரிய எம்.பி., "நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை." என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, "மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் (லால்காந்த) குறிப்பிட்ட குரல் பதிவு என்னிடம் உள்ளது.

அதனை ஒலிபரப்ப அனுமதி வழங்குங்கள்" என சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கேள்வியெழுப்பினர்.

சீ.ஐ.டி. அதிகாரிகள் என கூறி போலி அடையாளத்துடன் அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை

சீ.ஐ.டி. அதிகாரிகள் என கூறி போலி அடையாளத்துடன் அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை

நீதி அமைச்சரிடம் வலியுறுத்து

இதற்குப் பதிலளித்த சபைக்குத் தலைமை தாங்கிய கிங்க்ஸ் நெல்சன் எம்.பி, "அனைவரிடமும் குரல் பதிவு உள்ளது.

அனைவரும் ஒலிபரப்புச் செய்தால் அது பிரச்சினையாகும். அத்துடன் வெளி நபர்களின் குரல்களை சபையில் ஒலிபரப்ப முடியாது." என்றார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்து: நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை | Lalkanta S Comment Of Contempt Of Court

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹர்ஷண ராஜகருணா, "மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டதாகக் கூறும் குரல் பதிவை சபையில் ஒலிபரப்புச் செய்து சட்டத்தை தனிநபர் ஒருவர் செயற்படுத்தும்போது அதன் விளைவு பாரதூரமாக அமையும்.

ஆகவே, அவரின் கருத்து எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் இதனை அலட்சியப்படுத்த முடியாது. எனவே, இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்." என்று நீதி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அரச எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் ஜே .வி.பி. மீது கடும் கண்டனங்களை வெளியிட்டு கருத்துக்களை வெளியிட்டதால் சபை அரைமணிநேரம் அமளிதுமளிப்பட்டது.

இறுதியில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையும். ஆகவே, இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US